Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுக்கும்; வானிலை மையம் அறிவிப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுக்கும்; வானிலை மையம் அறிவிப்பு

By: Nagaraj Thu, 14 May 2020 5:13:10 PM

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுக்கும்; வானிலை மையம் அறிவிப்பு

புயலாக உருவெடுக்கும்.. நாளை மறுநாள் (மே 16) காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். மேலும் வருகின்ற 16ம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

storm,warning,fishermen,sea,weather center ,
புயல், எச்சரிக்கை, மீனவர்கள், கடல், வானிலை மையம்

வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகும்.

storm,warning,fishermen,sea,weather center ,
புயல், எச்சரிக்கை, மீனவர்கள், கடல், வானிலை மையம்

தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் வரும் நாளை சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்திலும், 16ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 75 கி.மீ வேகத்திலும், 17ம் தேதி 65 முதல் 85 கி.மீ வேகத்திலும் காற்று வீசும்.

இந்த குறிப்பிட்ட மூன்று நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|