Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமான பயணத்தில் முறைகேடாக நடந்த ட்ரம்ப்... குற்றச்சாட்டு வைத்த பெண்

விமான பயணத்தில் முறைகேடாக நடந்த ட்ரம்ப்... குற்றச்சாட்டு வைத்த பெண்

By: Nagaraj Wed, 03 May 2023 11:54:40 PM

விமான பயணத்தில் முறைகேடாக நடந்த ட்ரம்ப்... குற்றச்சாட்டு வைத்த பெண்

அமெரிக்கா: விமானத்தின் போது எதிர்பாராதவிதமாக தன்னை முத்தமிட முயன்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப் மீது ஜெசிக்கா என்ற பெண் புகார் செய்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து இவரை சூடான சர்ச்சைகள்தான் சுற்றி சுழல்கிறது.

2024 தேர்தலில் ஜோ பிடனை எதிர்த்து மீண்டும் போட்டியிடப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், தற்போது அவர் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். டிரம்ப் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

air travel,america,complaint,harassment,sex,trump,woman, ,அமெரிக்கா, ட்ரம்ப், தொல்லை, பாலியல், புகார், பெண், விமான பயணம்

ஆபாச நடிகை ஸ்டாராமி டேனியல்ஸ் மற்றும் பத்திரிகையாளரும் கட்டுரையாளருமான ஜோன் கரோல் ஆகியோர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பெண் அமெரிக்க சிவில் நீதிமன்றத்தில் புதிய புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜெசிகா லீட்ஸ் என்ற பெண் மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், 1978 ஆம் ஆண்டு டிரம்ப் விமானத்தின் போது சக பயணியாக இருந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக தன்னை முத்தமிட முயன்றதாகவும், தனது மார்பகங்களை சீண்டியும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஜெசிக்கா புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தனது ஸ்கர்ட் உடையில் அத்துமீறி கை வைத்து தொல்லை கொடுத்ததாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.

புகார் அளித்த ஜெசிகாவுக்கு தற்போது வயது 81. வழக்கு தொடர்ந்த ஜான் கரோலுக்கு வயது 79. சர்ச்சையில் சிக்கிய டிரம்புக்கு வயது 76. 2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது அடுத்த தேர்தல் விரைவில் வர உள்ளதால் டிரம்பை சுற்றி புதிய சர்ச்சைகள் எழ ஆரம்பித்துள்ளன.

Tags :
|
|
|