Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்டம்பர் 15-ஆம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கவுள்ளது

செப்டம்பர் 15-ஆம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கவுள்ளது

By: vaithegi Tue, 27 June 2023 3:27:03 PM

செப்டம்பர் 15-ஆம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கவுள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம். இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் நிலவிய நிலையில், பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அறிவிப்பு பற்றி கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனவும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

womens rights scheme,government of tamil nadu , மகளிர் உரிமை தொகை திட்டம்,தமிழக அரசு


இதையடுத்து இச்சமயத்தில், மகளிரின் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தி இருந்தார். வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் உயரதிகரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக நேற்று முதலமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில், குறைந்தபட்ச வயது வரம்பு, ஆண்டு வருமானத்தை கணக்கீடு செய்து குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க முடிவு செய்திருப்பதாகவும், திட்டமிட்டபடி செப். 15ம் தேதி ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது என்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல் கூறி உள்ளனர்.

மேலும், ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதுவும், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மகளிர் உரிமை தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :