Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுகவினர் கொடுத்த அசத்தல் வரவேற்பு... முன்னாள் அமைச்சருக்கு இன்ப அதிர்ச்சி

அதிமுகவினர் கொடுத்த அசத்தல் வரவேற்பு... முன்னாள் அமைச்சருக்கு இன்ப அதிர்ச்சி

By: Nagaraj Sat, 25 June 2022 11:28:37 PM

அதிமுகவினர் கொடுத்த அசத்தல் வரவேற்பு... முன்னாள் அமைச்சருக்கு இன்ப அதிர்ச்சி

சென்னை: அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலிமையானவர்களாகவும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஆதரவு குறைந்தவர்களாகவும் ஒரு சித்தரிப்பு இருக்கிறது. ஆனால், இந்த சித்திரத்தை கிழித்தெறிந்திருக்கிறது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கு அரியலூர் தொடங்கி தஞ்சை வரை அதிமுகவினரால் கொடுக்கப்பட்ட வரவேற்பு.

பொதுக்குழுவில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளரான வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் மேடையிலேயே அவமதிப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மேடையில் இருந்து இறங்கினார்கள். அப்போது வைத்திலிங்கம் தனது பக்கத்தில் இருந்த ஒலிப்பெருக்கி அருகே சென்று, ‘இது சட்ட விரோத பொதுக்குழு’ என்று முன்கையை தூக்கி முழக்கமிட்டுவிட்டு இறங்கினார். பொதுக்குழுவில் நடந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு, ஏற்கனவே எடப்பாடி அணிக்கு சென்ற சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவ.மதிவாணன் மீண்டும் வைத்திலிங்கம் அணிக்கே திரும்பிவிட்டார்.

பொதுக்குழு முடிந்த அன்றே பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்ற நிலையில், மறுநாள் 24 ஆம் தேதி சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார் வைத்திலிங்கம். பொதுக்குழுவுக்கு முந்தைய நாட்களில் வைத்திலிங்கத்தின் ஆதரவு ஒன்றிய செயலாளர்களையும், அவரது நிழலாகவே கருதப்பட்ட காந்தி என்பவரையும், தாமரை ராஜேந்திரன் போன்றவர்களையும் எடப்பாடி அணியினர் தங்கள் பக்கம் இழுத்தனர். இதனால் வைத்திலிங்கம் அடைந்த அதிருப்தியை அவரது 24 ஆம் தேதிய தஞ்சை வருகை போக்கியிருக்கிறது.

reception,stage,vaithilingam,general assembly,pleasure shock ,வரவேற்பு, மேடை, வைத்திலிங்கம், பொதுக்குழு, இன்ப அதிர்ச்சி

சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட வைத்திலிங்கம் பிற்பகல் அரியலூர் வந்தார். திருமானூர்க்கும் கீழப் பழூருக்கும் இடையே சுகர் மில் பகுதிக்கு 2.10 மணிக்கு வந்த வைத்திலிங்கத்தை வரவேற்க அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் திரண்டனர்.


இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இருநூறுக்கும் மேல் திரண்டனர். கார்களும் சுமார் இருநூற்றைம்பதுக்கு மேல் திரண்டன. திருவையாறு, மேலவஸ்தாசாவடி உள்ளிட்ட ஏழெட்டு பாயின்ட்டுகளில் வைத்திலிங்கத்துக்கு வரவேற்பு கொடுக்க ஏராளமான அதிமுகவினர் திரண்டனர்.

தஞ்சை எல்லையில் இருந்து வைத்திலிங்கம் வந்தடைந்த தமிழ்நாடு ஹோட்டல் வரை திரண்ட தொண்டர்கள் கூட்டம் அவரையே வியக்க வைத்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் அரியலூரில் இருந்து புறப்பட்ட வைத்திலிங்கத்தின் கார் மாலை 5.30க்குத்தான் தஞ்சாவூர் தமிழ்நாடு ஹோட்டலுக்கு வந்தது. அதன் பிறகுதான் மதிய சாப்பாட்டை சாப்பிட்டார் வைத்திலிங்கம்.

Tags :
|