Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெருங்களத்தூர் மேம்பாலம் பணிகள் நிறைவு... நாளை மறுநாள் திறப்பு விழா

பெருங்களத்தூர் மேம்பாலம் பணிகள் நிறைவு... நாளை மறுநாள் திறப்பு விழா

By: Nagaraj Mon, 26 June 2023 7:58:23 PM

பெருங்களத்தூர் மேம்பாலம் பணிகள் நிறைவு... நாளை மறுநாள் திறப்பு விழா

சென்னை: பெருங்களத்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இதன் மூலம், 2019ல், 234 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வழிச்சாலை மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.

ஆனால், கொரோனா காரணமாக இந்தப் பணி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் தொடர்ந்தது. கடந்த ஆண்டு வண்டலூரில் இருந்து தாம்பரம் வரை ஒருவழிப்பாதை மட்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது வழித்தடமான, பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசராகவன் பகுதிக்கு செல்லும் மேம்பாலம், கடந்த ஒரு வாரத்துக்கு முன் முடிக்கப்பட்டது.

day after tomorrow,flyover,opening,perungalathur,railway , திறப்பு, நாளை மறுநாள், பெருங்களத்தூர், மேம்பாலம், ரயில்வே

ஆனால், இன்று வரை பாலம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பாலத்தை விரைவில் திறக்க, பெருங்களத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் இணைப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பாலத்தில் சில பணிகள் முடிவடையவில்லை என்றும் தெரிவித்தனர். தற்போது பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், பெருங்களத்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை பெருங்களத்தூர் – பீர்க்கன்காரணையை இணைக்கும் மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளது. சிறு, குறு தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

Tags :