Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகள் அடுத்த மாதம் நிறைவு

2 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகள் அடுத்த மாதம் நிறைவு

By: Nagaraj Tue, 14 Feb 2023 9:52:45 PM

2 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகள் அடுத்த மாதம் நிறைவு

புதுடில்லி: 22 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்... சென்னை, புனே உள்ளிட்ட 22 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அனைத்து பணிகளும் அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தகவல்.

நாட்டின் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பை, மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை தொடங்கியது. அதன்படி, மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட நகரங்களை மேம்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு தனியாக நிதியையும் ஒதுக்கீடு செய்திருந்தது.

tiruchirappalli,visakhapatnam,coimbatore,cities,list ,திருச்சிராப்பள்ளி, விசாகப்பட்டினம், கோயம்புத்தூர், நகரங்கள், பட்டியல்

இந்த நிலையில், மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதல் 22 ஸ்மார்ட் சிட்டிகள் மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்ரா, வாரணாசி, சென்னை, புனே, மதுரை, ராஞ்சி மற்றும் அகமதாபாத் ஆகியவை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதல் 22 நகரங்களில் மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சிராப்பள்ளி, விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மிஷனின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மீதமுள்ள 78 நகரங்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தயாராகிவிடும் என்று நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Tags :
|