Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் வேலை பறிபோனது; தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தும் தலைமை ஆசிரியர்

கொரோனாவால் வேலை பறிபோனது; தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தும் தலைமை ஆசிரியர்

By: Nagaraj Wed, 24 June 2020 10:31:04 AM

கொரோனாவால் வேலை பறிபோனது; தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தும் தலைமை ஆசிரியர்

தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தும் தலைமை ஆசிரியர்... தெலங்கானாவில் ஊரடங்கால் வேலையை இழந்த தலைமை ஆசிரியர் ஒருவர், தற்போது தள்ளுவண்டி கடையில் உணவு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பால் பலரும் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உடல்ரீதியாக பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், இதுபோன்ற பிரச்சனைகளால் மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தெலங்கானாவில் வேலையை இழந்த தலைமை ஆசிரியர் ஒருவர் தள்ளுவண்டியில் இட்லி, வடை, தோசை விற்பனை செய்து வருகிறார்.

கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 36 வயதான மராகனி ராம்பாபு என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. தொற்று குறையும் வரை பள்ளிகளை மீண்டும் திறப்பதில் சிரமம் உள்ளது. அதனால் பள்ளிகள் திறக்கும் வரை தலைமை ஆசிரியர் தேவையில்லை எனக் கூறி பள்ளி நிர்வாகம் ராம்பாபுவை பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.

வேறு வழியின்றி தள்ளுவண்டியில் உணவு விற்க ஆரம்பித்துள்ளார். அவரும், அவரது மனைவியும் இணைந்து இட்லி, தோசை, வடை உள்ளிட்ட காலை உணவுகளை விற்று வருமானம் ஈட்டி வருகின்றனர். அவரை போல் பள்ளியில் பணிபுரிந்த வேறு சிலரும் வேலையை இழந்து சிரமப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மராகனி ராம்பாபு கூறுகையில், 'எனது குடும்பத்தினரின் நலன் கருதி தள்ளுவண்டியில் வைத்து உணவுகள் விற்க ஆரம்பித்தேன். ஊரடங்கால் என்னைப் போல் பலரும் வேலையை இழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.

private school,headmaster,trolley,food,rambabu ,தனியார் பள்ளி, தலைமை ஆசிரியர், தள்ளுவண்டி, உணவு, ராம்பாபு

Tags :
|