Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் வேலை போனது; தன்னம்பிக்கையால் வருமானத்திற்கு வழி பிறந்தது

கொரோனாவால் வேலை போனது; தன்னம்பிக்கையால் வருமானத்திற்கு வழி பிறந்தது

By: Nagaraj Fri, 14 Aug 2020 3:51:27 PM

கொரோனாவால் வேலை போனது; தன்னம்பிக்கையால் வருமானத்திற்கு வழி பிறந்தது

கொரோனா பலரோட வாழ்க்கையை முழுமையாக மாத்தி இருக்கு. 15 வருஷமா பல பெரிய ஹோட்டல்ல மேனேஜராக இருந்த, சென்னை, யோகேஷ்வரனோட வாழ்க்கையும் இப்போ மாறி இருக்கு.

3 மாசமா சம்பளம் இல்லை. குடும்பத்துல பிரச்சனை, பசங்க கேக்கறத வாங்கி கொடுக்க முடியலை. என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சாரு. ஹோட்டல் துறையில அனுபவம் இருக்கு. மனைவி நல்லா சமைப்பாங்க. டிபன் கடை ஸ்டார்ட் பண்ணிடுவோம்னு வீட்டு பக்கத்துலே டிபன் சென்டரை தொடங்கிட்டாரு.

chennai,corona,turned,excitement,dipon shop ,சென்னை, கொரோனா, மாறியது, உற்சாகம், டிபன் கடை

வருமானமும் அதிகரிக்க ஆரம்பித்ததால் உற்சாகமாக இருக்கிறார். பல ஓட்டல்களில் மேனேஜராக பதவி வகித்து இருந்தாலும் இந்த கொரோனாவால் வருமானம் பாதிக்கப்பட்டது. இதை நினைத்து வேதனைப்பட்டால் குடும்பத்தை கவனிக்க இயலாது என்பதால் இந்த டிபன் சென்டரை ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில் சற்றே கவலையாக இருந்தாலும் தற்போது வாடிக்கையாளர்கள் வரத்து அதிகரித்து விட்டது. இதை படிப்படியாக உயர்த்தி கொஞ்சம் பெரிய அளவில் டிபன் கடையாக வைத்து விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|