Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனுக்கு கை கொடுக்கிறது உலக வங்கி... புனரமைப்புக்கு 530 மில்லியன் டாலர்கள்

உக்ரைனுக்கு கை கொடுக்கிறது உலக வங்கி... புனரமைப்புக்கு 530 மில்லியன் டாலர்கள்

By: Nagaraj Sun, 02 Oct 2022 5:29:11 PM

உக்ரைனுக்கு கை கொடுக்கிறது உலக வங்கி... புனரமைப்புக்கு 530 மில்லியன் டாலர்கள்

நியூயார்க்: உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடர்ந்து 7 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு உதவியாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பொருளாதார வகையிலும், ஆயுத வகையிலும் உதவி வருகிறது.

அதிநவீன மேற்கத்திய ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளுடன் போராடி வந்த உக்ரைன் படைகள் ரஷ்யா கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வருகின்றன.

report,ukraine,world bank,financing,london ,அறிக்கை, உக்ரைன், உலக வங்கி, நிதியுதவி, லண்டன்

இந்நிலையில் போரில் சேதம் அடைந்த உக்ரைன் நகரங்களின் புறனமைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக உலக வங்கி 530 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த நிதித் தொகுப்பை லண்டன் 500 மில்லியன் டாலர்களும், டென்மார்க் 30 மில்லியன் டாலர்களும் வழங்குவதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மேலும் இதுவரை உக்ரைனுக்கு வழங்கவிருந்த 13 பில்லியன் டாலர்களில் 11 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|