Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆர்ப்பரித்து கொட்டுகிறது உலக புகழ் பெற்ற கர்நாடகாவின் ஜோக் நீர்வீழ்ச்சி

ஆர்ப்பரித்து கொட்டுகிறது உலக புகழ் பெற்ற கர்நாடகாவின் ஜோக் நீர்வீழ்ச்சி

By: Nagaraj Mon, 13 Mar 2023 10:51:55 PM

ஆர்ப்பரித்து கொட்டுகிறது உலக புகழ் பெற்ற கர்நாடகாவின் ஜோக் நீர்வீழ்ச்சி

கர்நாடகா: உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழை காலத்தில் 4 மாதங்கள் மட்டுமே தண்ணீர் விழும் ஜோக் நீர்வீழ்ச்சியில் தற்போது வெயில் காலத்திலும் தண்ணீர் கொட்டுவதால் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் வெயிலின் தாக்கம் எதிரொலிக்கிறது.

அதிக வெப்பத்தால் மின்விசிறி, ஏ.சி. போன்றவை இல்லாமல் மக்களால் தூங்க முடிவதில்லை. இதனால், மக்கள் விடுமுறை நாட்களில் ஆறு, ஏரி, அணை, நீர்வீழ்ச்சி ஆகிய நீர்நிலைகளுக்கு சென்று வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் பல பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வந்தாலும், சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ள உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

cool,despite,reverberates,scorching, ,ஆறு, சிவமொக்கா, மழை, வெயில்

மழை காலத்தில் 4 மாதங்கள் மட்டுமே தண்ணீர் விழும் ஜோக் நீர்வீழ்ச்சியில் தற்போது வெயில் காலத்திலும் தண்ணீர் கொட்டுவதால் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவிலேயே 2-வது உயரமான நீர்வீழ்ச்சியாகும். 900 அடி உயரத்தில் இருந்து 4 கிளைகளில் தண்ணீர் கொட்டுவதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அந்த 4 கிளைகளுக்கும் ராஜா, ராணி, ரோரர், ராக்கெட் என பெயரிடப்பட்டுள்ளது.கடும் வெயில் வாட்டி வந்தாலும், ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியில் ரம்மியமான சூழலே நிலவுகிறது.

இந்நிலையில், வார விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து வந்தனர். அவர்கள் ஜோக் நீர்வீழ்ச்சி மற்றும் ஷராவதி நீர்தேக்கத்தின் அழகையும், ரம்மியமான சூழலையும் ரசித்து அனுபவித்தனர். ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags :
|