Advertisement

அச்சத்தை போக்கியது உலக சுகாதார அமைப்பு

By: Nagaraj Fri, 14 Aug 2020 4:05:40 PM

அச்சத்தை போக்கியது உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு தகவல்... உணவுப் பொருட்களை பேக்கிங் செய்யும் போது அதில் கொரோனா தொற்று பரவும் ஆபத்து இருக்கலாம் என்ற அச்சத்தை உலக சுகாதார அமைப்பு போக்கியுள்ளது. அத்தகைய ஆபத்து ஏதுமில்லை என்றும் வைரஸ் உணவுப் பேக்குகளில் ஊடுருவ இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இரண்டு நகரங்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பேக்கிங்குகளில் கொரோனா தொற்று இருந்ததாக புகார் எழுந்தது.உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் நோய்த் தொற்று பரவல் அதிகமாகலாம் என்றும் அச்சம் எழுந்தது.

food,baking,corona,no fear ,உணவுப்பொருட்கள், பேக்கிங், கொரோனா, அச்சம் இல்லை

இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உரை நிகழ்த்திய உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி மைக் ராயன், உணவுப் பொருட்கள் குறித்த அச்சம் தேவையற்றது என்று விளக்கினார்.

உணவு பேக்கிங், விநியோகம் போன்ற சங்கிலித் தொடரில் கொரோனா ஊடுருவல் இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் மக்கள் அச்சமின்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|