Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது - சீனா வைராலஜி நிபுணர் லீ மெங் யான்

கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது - சீனா வைராலஜி நிபுணர் லீ மெங் யான்

By: Karunakaran Thu, 24 Sept 2020 4:41:12 PM

கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது - சீனா வைராலஜி நிபுணர் லீ மெங் யான்

கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவ ஆரம்பித்தவுடனே அதுகுறித்த தகவலை சீனா வெளியிட மறுத்துவிட்டதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், சீனாவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் லீ மெங் யான் என்பவர் கொரோனா வைரஸ் உகான் மாகாண ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது செவ்வாய்க்கிழமை இதுகுறித்து பேசிய லீ மெங் யான், கொரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனைக் குறித்து அறிந்திருந்ததாக கூறியுள்ளார்.

world health organization,corona virus,chinese virologist,lee meng yan ,World Health Organist, Corona Virus, Signs Virologist, Lee Meng Yan

மேலும் அவர், உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார். சீன அரசு மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் லீ மெங் யான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து சீனாவை குற்றம் சாட்டி வருகிறார். ஏற்கனவே அவர் உலக சுகாதார நிறுவனம்சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags :