Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

By: Karunakaran Sat, 11 July 2020 4:35:39 PM

தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

world health organization,dharavi,corona virus,corona control ,உலக சுகாதார அமைப்பு, தாராவி, கொரோனா வைரஸ், கொரோனா கட்டுப்பாடு

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவி மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. தாராவியில் ஆரம்பத்தில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. நெருக்கமான பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இதற்கு முன் மத்திய சுகாதாரத்துறை, தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்ததற்கு தனது பாராட்டை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :