Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது - அன்டோனியோ குட்டரெஸ்

உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது - அன்டோனியோ குட்டரெஸ்

By: Karunakaran Sat, 03 Oct 2020 6:45:56 PM

உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது - அன்டோனியோ குட்டரெஸ்

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தல் தினத்தையொட்டி, நேற்று ஐநா உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் ரஷியா, சீனா போன்ற பெரிய அணு ஆயுத நாடுகள் பட்டியலில் இருந்தன. ஆனால் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டத்தை புறக்கணித்தன. வடகொரியா, இஸ்ரேலும் கூட்டத்திற்கு வரவில்லை. ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல் போரில் 210,000 பேர் பலியானதை பேசிய பலரும் நினைவு கூர்ந்தனர்.

உயர்மட்ட கூட்டத்தில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளிடையே தொடரும் பகைமை, நம்பிக்கையின்மை, பதற்றங்கள் காரணமாக யோசிக்கத் துணிகின்றன. உதாரணமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பதற்றம், அமெரிக்க-ரஷிய உறவும் பதற்றமாக உள்ளது. அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காஷ்மீரை வைத்து சண்டையிட்டுக் கொள்கின்றன என்று கூறினார்.

shadow,catastrophe,nuclear war,antonio guterres ,நிழல், பேரழிவு, அணுசக்தி போர், அன்டோனியோ குடரெஸ்

வடகொரியா ஏற்கெனவே தனது அணு ஆயுத பலத்தைப் பற்றி பெருமையாகப் பேசி வருகிறது. அணு ஆயுதங்களை நவீனப்படுத்துதல் என்பது தர அளவிலான அணு ஆயுதப் போட்டிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளினால் உலகம் அணு ஆயுதப்போரின் பேரழிவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும். ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை எனில் மீண்டும் ஆயுதப்போட்டியே ஏற்படும் என அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜாவேத் ஜரீஃப், இந்தக் கூட்டம் உலகம் அணு ஆயுதப் போர் எனும் பேரழிவு கனவிலிருந்து விடுதலை பெற நல்வாய்ப்பாக அமையும். அமெரிக்கா புதிய அணு ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது. இஸ்ரேல் தனது டி.என்.ஏவிலேயே போர்க்குணம் கொண்டது, அந்நாட்டை அணு ஆயுதங்களிலிருந்து வெளியே வர உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும். உலகை அழிக்கும் ஆயுதங்களுக்கு ஏன் நிதியை விரயம் செய்ய வேண்டும், இதையே கொரோனாவை ஒழிக்கப் பயன்படுத்தலாமே என்று கூறினார்.

Tags :
|