Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகின் சிறந்த அறிவார்ந்த மாணவி... இந்திய வம்சாவளி நடாஷா 2ம் முறையாக தேர்வு

உலகின் சிறந்த அறிவார்ந்த மாணவி... இந்திய வம்சாவளி நடாஷா 2ம் முறையாக தேர்வு

By: Nagaraj Wed, 08 Feb 2023 11:50:50 AM

உலகின் சிறந்த அறிவார்ந்த மாணவி... இந்திய வம்சாவளி நடாஷா 2ம் முறையாக தேர்வு

வாஷிங்டன்: இரண்டாவது முறையாக தேர்வான மாணவி... அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மையத்தில், உலகின் சிறந்த அறிவார்ந்த மாணவியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா (13). இவரது பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி.

கடந்த ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் திறமையான இளைஞர்களுக்கான மையத்தில் பங்கேற்றார். இதில் இந்திய வம்சாவளி மாணவி நடாஷா வெற்றி பெற்று கவுரவிக்கப்பட்டார்.

indian origin girl,intellectual student,natasha, ,இந்திய வம்சாவளி பெண், உலகின் சிறந்த அறிவார்ந்த மாணவி, தேர்வு

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கான SAT மற்றும் ACD தேர்வுகளில் பங்கேற்றார். இந்தத் தேர்வில் 76 நாடுகளைச் சேர்ந்த 15300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாணவி நடாஷா அனைத்து மாணவர்களையும் விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் உலகின் மிக அறிவார்ந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

Tags :