Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 388 மைல் தூரம் வரை பயணிக்கலாம்

முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 388 மைல் தூரம் வரை பயணிக்கலாம்

By: Nagaraj Sat, 03 Dec 2022 11:56:19 AM

முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 388 மைல் தூரம் வரை பயணிக்கலாம்

நெதர்லாந்து: உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் காரை நெதர்லாந்தின் லைட் இயர் கார் நிறுவனம் உருவாக்கி வருகிறது. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 388 மைல் தூரம் வரை பயணிக்கலாமாம்.

வழக்கமான மின்சார செடான் மாடல் கார் போல தோற்றமளிக்கும் லைட்இயர்- 0 என்ற இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 43 மைல் தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

vehicle,solar power,travel,fully charged,booking ,வாகனம், சூரிய ஒளி சக்தி, பயணம், முழுமையாக சார்ஜ், முன்பதிவு

முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 388 மைல் தூரம் வரை பயணிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2 லட்சத்து 59 ஆயிரம் டாலர்கள் விலையில் இந்த கார் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 31 ஆயிரத்து 500 டாலர்கள் ஆரம்ப விலையில் மற்றொரு வாகனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த வாகனம் 2025-ம் ஆண்டுக்குள் உற்பத்திக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|