Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகிலேயே மிக அதிக வயதான தென்கொரியாவை சேர்ந்தவர் காலமானார்

உலகிலேயே மிக அதிக வயதான தென்கொரியாவை சேர்ந்தவர் காலமானார்

By: Nagaraj Sun, 23 Aug 2020 6:53:26 PM

உலகிலேயே மிக அதிக வயதான தென்கொரியாவை சேர்ந்தவர் காலமானார்

மிகவும் வயதானவர் காலாமானார்... உலகின் மிக வயதான நபராக கருதப்படும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஃப்ரெடி ப்ளோம் தமது 116வது வயதில் காலமானார்.

1904ம் ஆண்டு ஈஸ்டர்ன் கேப்பில் பிறந்த இவரது தகவல்கள் உலக கின்னஸ் சாதனைக்காக அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவில்லை என்றாலும், அவரது மறைவை வெளியிட்ட தென் ஆப்பிரிக்க ஊடகங்கள் 'உலகின் மிகவும் வயதான மனிதர்' என்று பயன்படுத்தியுள்ளன.

கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றிய அவர், தனது 80வது வயதில் ஓய்வு பெற்றார். 2018ம் ஆண்டு பிபிசிக்கு பேட்டியளித்த அவர், தனது நீண்ட ஆயுளுக்கு எந்த ரகசியமும் இல்லை என்று கூறியிருந்தார்.

world,very old,deceased,ill ,உலகம், மிகவும் வயதானவர், காலமானார், உடல் நலக்குறைவு

தனக்கு மேலே உள்ள சக்தி தான் தன்னை நீண்ட காலம் உயிருடன் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். தனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுமட்டுமல்லாமல் 116 வயதான அந்த முதியவர், 1918ம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் ஃபுளூ முதல் தற்போது உள்ள கொரோனா வைரஸ் வரை பார்த்தவர். தொற்றுநோயில் இருந்து தப்பியது மட்டுமல்லாமல், இரண்டு உலகப் போர்களையும் கடந்து வந்தவர். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடந்த தாக்குதல்களையும் எதிர்கொண்டவர்.

இந்நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|