Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் காஷ்மீரில் அமைய உள்ளது

உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் காஷ்மீரில் அமைய உள்ளது

By: Karunakaran Mon, 24 Aug 2020 12:43:24 PM

உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் காஷ்மீரில் அமைய உள்ளது

உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டு வருகிறது. காஷ்மீரின் ரியா மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில் 1.3 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது.

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரத்தை இந்த பாலம் கொண்டதாகும். மிகவும் உயரமான இடத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்தை கட்டும் பணியில் ஆப்கான்ஸ் கட்டுமான குழுமம் ஈடுபட்டு வருகிறது.

tallest railway bridge,kashmir,india,world ,மிக உயரமான ரயில் பாலம், காஷ்மீர், இந்தியா, உலகம்

இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடையும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் நடைபெறுவதில் சிக்கல் நிலவி வந்தது. தற்போது, பாலத்தின் கட்டுமான பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

பாலத்தின் கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்துவரும் துணை தலைமை பொறியாளர் ஆர் ஆர் மாலிக் இதுகுறித்து கூறுகையில், பாலத்தில் வளைவுகள் வைக்கும் பணி டிசம்பர் மாதத்தில் முடிவடையும் மேலும் எஞ்சிய பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று கூறியுள்ளார்.

Tags :
|