Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூரையை பிய்த்துக் கொண்டு வந்த கல்லால் கோடீஸ்வரர் ஆன இளைஞர்

கூரையை பிய்த்துக் கொண்டு வந்த கல்லால் கோடீஸ்வரர் ஆன இளைஞர்

By: Nagaraj Wed, 18 Nov 2020 9:40:42 PM

கூரையை பிய்த்துக் கொண்டு வந்த கல்லால் கோடீஸ்வரர் ஆன இளைஞர்

கூரையை பிய்த்துக்கொண்டு வந்த கல்லால் கோடீஸ்வரர் ஆகி உள்ளார் இந்தோனேசியா இளைஞர் ஒருவர்.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் வசித்து வருபவர் Josua Hutagalung. 33 வயதாகும் Josua அந்த பகுதியில் உள்ள சவப்பெட்டி செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் தனது வருமானத்தில்தான் குடும்பத்தை கவனித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் Josua அவரது வீட்டிற்குள் இருந்தபோது திடீரெனெ வீட்டுக்கு வெளியே பெரிய சத்தம் கேட்டுள்ளது. உடனே வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் மேற்கூரை உடைந்திருந்தநிலையில் கீழே மிகப்பெரிய கல் ஒன்று மண்ணை துளைத்துக்கொண்டு கீழே கிடப்பதை Josua பார்த்துள்ளார்.

உடனே அந்த கல்லை அவர் எடுக்க முயற்சித்தபோது அந்த கல் மிகவும் சூடாக இருந்துள்ளது. பின்னர் அந்த கல்லை சுற்றி பள்ளம் தோண்டி அந்த கல்லை எடுத்துள்ள Josua. முதலில் அது என்ன கல் என்று அவருக்கு தெரியவில்லை. அந்த பகுதியில் இருந்த யாரவது அந்த கல்லை வீசி சென்றிருக்கலாம் என அவர் நினைத்துள்ளார்.

indonesia,luck,millionaire,roof,meteor ,இந்தோனேசியா, அதிர்ஷ்டம், கோடீஸ்வரன், கூரை, விண்கல்

பின்னர்தான் அவருக்கு தெரிந்துள்ளது அது ஒரு விண்கல் என்று. இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் தீயாக பரவ, பலரும் Josua வின் வீட்டிற்கு வந்து அந்த விண்கல்லை ஆர்வமுடன் பார்த்து சென்றுள்ளனர். பின்னர் அந்தத் விண்கல்லை அமெரிக்க விண்கல் நிபுணர் கொலின்ஸ் என்பவர் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதை விண்கல் சேகரிப்பாளர் ஜெய் பியடெக் என்பவர் வாங்கியுள்ளார். அந்த விண்கல்லை சோதனை செய்தபோது அந்த கல் மிகவும் அபூர்வமானது என்றும், அந்த விண்கல் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் தெரியவந்துள்ளது. இந்த விண்கல்லானது CM1/2 வகையைச் சார்ந்த மிகவும் அரிதான ஒன்றாகும். இதனை அடுத்து அந்த விண்கல் சுமார் 1.4 மில்லியன் பவுண்ட் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்புப்படி சுமார் 13 கோடி ரூபாய் ஆகும். இதனால் Josua ஒரே நாளில் கோடிஸ்வரனாகியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், வாழ்நாள் முழுவதும் சவப்பெட்டி செய்வதில்லையே சென்றுவிடும் என்றுதான் நினைத்தேன். ஆனால் தற்போது எனக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று என Josua கூறியுள்ளார்.

Tags :
|
|