பிளாஸ்டிக் பையில் சுற்றி குழந்தையை ஆட்டோவில் விட்டுச் சென்ற இளம்பெண்
By: Nagaraj Tue, 27 Dec 2022 10:41:11 AM
சென்னை: குழந்தையை ஆட்டோவில் விட்டு சென்ற பெண்... சென்னை அருகே பச்சிளம் குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்டோவில் விட்டுச் சென்ற பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் காதர் என்பவரின் ஆட்டோவில் கைக்குழந்தையுடன் ஏறிய இளம்பெண் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கினார்.
அவரை இறக்கிவிட்டு திரும்பியபோது ஆட்டோவில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக காதர் ஆட்டோவை நிறுத்திவிட்டு தேடி பார்த்தபோது, பிளாஸ்டிக் பையில் பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போலீசார், குழந்தையை மீட்டு முதலுதவி அளித்து, தி.நகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.