Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பங்களை வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் .. முதலமைச்சர்

இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பங்களை வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் .. முதலமைச்சர்

By: vaithegi Tue, 14 Mar 2023 2:38:51 PM

இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பங்களை வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்  ..  முதலமைச்சர்


சென்னை : சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற பிரிட்ஜ் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, “நமது அன்றாட தேவையில் ஒன்றாக செல்போன், கணினி, இன்டெர்நெட் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மாறியுள்ளன. ஒரு குடையின் கீழ் உலகம் வந்துவிட்டது. கல்வித்துறையில் தொழில்நுட்பங்கள் முக்கியமாகவுள்ளது. விரல் நுனியில் கல்வி கிடைக்கிறது , வகுப்பறைகள் நவீனமாகி , புத்தகங்கள் மிக எளிதில் கிடைக்கின்றன.

எனவே மாணவர்கள் அறிவோடும் அறிவியலோடும் கற்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். தொழில்நுட்பங்கள் மூலம் மருத்துவத் துறையில் அனைத்தும் எளிமையாகியிருக்கிறது , இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து பாதுகாக்க உதவுகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார் கருணாநிதி” என கூறினார்.

chief minister,the younger generation ,முதலமைச்சர் ,இளைய தலைமுறையினர்

மேலும் எல்லாவற்றிலும் 2 பக்கம் இருக்கும் என கூறிய முதலமைச்சர், “இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பங்களை வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், தொழில்நுட்பங்களுக்கு நாம் அடிமை ஆகிவிடக்கூடாது. வதந்தி பரப்பி , சட்டம் ஒழுங்கை கெடுக்க சில அரசியல் கட்சிகள் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து ஒரு காலத்தில் கனவாக நினைத்ததெல்லாம் உண்மையாகி கொண்டு வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகள் மனித உயிர்களை பலிவாங்கி வருகிறது. இதனால் நாம் கவனமுடன் கையாள வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

Tags :