ஒன்ராறியோவில் வெள்ளிக்கிழமை திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு
By: Nagaraj Wed, 15 July 2020 7:54:28 PM
தளர்வுகள் அறிவிப்பு... ஒன்ராறியோவின் 34 உள்ளூர் பொது சுகாதார பிரிவு பிராந்தியங்களில், பெரும்பாலானவை ஜூலை 17ஆம் திகதி முதல் மூன்றாம் நிலைக்கு முன்னேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்மைய, உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள் மற்றும் உட்புற உணவகங்கள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து வணிகங்களும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் உள்ள சுகாதார அலகுகள், நயாகரா மற்றும்
வின்ட்சர் போன்ற சிலவற்றோடு, மூன்றாம் நிலைக்கு முன்னேறும் பகுதிகளின்
பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
பட்டியலில் இருந்து விலக்கப்பட்ட பகுதிகள் மறுதொடக்கம் கட்டத்தின் 2ஆம் கட்டத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
ontario |
restart |