Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் திரையரங்குகள் இயங்க அனுமதியில்லை; அரசு அறிவிப்பு

தமிழகத்தில் திரையரங்குகள் இயங்க அனுமதியில்லை; அரசு அறிவிப்பு

By: Nagaraj Sun, 30 Aug 2020 7:01:33 PM

தமிழகத்தில் திரையரங்குகள் இயங்க அனுமதியில்லை; அரசு அறிவிப்பு

தியேட்டர்கள் இயங்க அனுமதியில்லை... தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கரோனா பரவல் விகிதத்திற்கேற்பவும், பொருளாதார இழப்பை ஈடுசெய்யவும் அவ்வபோது தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

அந்தவகையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மீண்டும் பொதுமுடக்கத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்குள் வருவோர் இ-பாஸ் எடுத்துவரவேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

government announcement,theaters,schools,ban continues ,அரசு அறிவிப்பு, தியேட்டர்கள், பள்ளிகள், தடை தொடர்கிறது

தமிழகத்தில செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை தொடரும். வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம்.

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தங்கும் வசதியுடன் கூடிய கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறன் மற்றும் தொழில்பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் அதன்சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :