Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் கொரோனா குறைந்ததையடுத்து தியேட்டர்கள் அடுத்த வாரம் முதல் திறப்பு

சீனாவில் கொரோனா குறைந்ததையடுத்து தியேட்டர்கள் அடுத்த வாரம் முதல் திறப்பு

By: Karunakaran Fri, 17 July 2020 09:38:09 AM

சீனாவில் கொரோனா குறைந்ததையடுத்து தியேட்டர்கள் அடுத்த வாரம் முதல் திறப்பு

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் தோன்றியது. சீனாவில் வைரஸ் பரவத்தொடங்கியபோதே மக்கள் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள் போன்ற பல பொழுதுபோக்கு பகுதிகள் மூடப்பட்டன. இதனால் அங்கு கொரோனா கட்டுக்குள் வந்தது.

தற்போது வைரசின் தாக்கம் குறைந்து விட்டதால், மூடப்பட்டுள்ள தியேட்டர்களை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க சீன திரைப்பட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தியேட்டருக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல் காய்ச்சல் உள்ளதா? என சோதனை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

china,coronavirus,corona prevalence,cinema theatre ,சீனா, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, சினிமா தியேட்டர்

கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தியேட்டரில் உள்ள மொத்த இருக்கையில் 30 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது உலகளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியை ,ரஷ்யா நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. கொரோனா விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|