Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்கள் திறக்கப்படாது!

கேரளாவில் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்கள் திறக்கப்படாது!

By: Monisha Fri, 02 Oct 2020 6:26:19 PM

கேரளாவில் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்கள் திறக்கப்படாது!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்கள் திறக்கப்படாது. இது தொடர்பாக கேரள தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

"கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை. ஜி.எஸ்.டி., முனிசிபல் வரி, போன்ற வரி விதிப்புகளுடன் 50 சதவீத பார்வையாளர்களை கொண்டு தியேட்டர்களை லாபகரமாக இயக்க முடியாது.

corona virus,theaters,cinema,taxation ,கொரோனா வைரஸ்,தியேட்டர்கள்,சினிமா,வரி விதிப்பு

மேலும் தற்போதைய சூழலில் பார்வையாளர் யாருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் தியேட்டரை மூட வேண்டிய நிலை ஏற்படும்.

வரி விதிப்புகளை அரசு நீக்கினால் மட்டுமே சினிமா தியேட்டர்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்". இவ்வாறு கேரள தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags :
|