Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன

ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன

By: Nagaraj Sat, 13 Aug 2022 10:07:44 PM

ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன

காஷ்மீர்: காஷ்மீர் ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சினிமா திரையரங்குகள் திறக்கப்படவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

1990இல் தீவிரவாத எழுச்சியின் காரணமாக காஷ்மீர் பள்ளதாக்குகளில் சினிமா திரையரங்குகள் மூடப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு 370 நீக்கப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்பட வழி பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திரையரங்கை ஐநாக்ஸ் (INOX) வடிவமைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது வரும் செப்டம்பர் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வருமென தகவல் சொல்லப்படுகிறது.

jammu,youth,employment,multiplex,seats ,ஜம்மு, இளைஞர்கள், வேலைவாய்ப்பு, மல்டி பிளக்ஸ், இருக்கைகள்

ஐநாக்ஸ் திட்ட மேலாளர் கூறியதாவது: 30 வருடமாக அங்கு திரையரங்குகளே இல்லை. எனவே நாங்கள் ஏனிங்கு தொடங்கக்கூடாது என நினைத்தோம். நாட்டில் உள்ளது போல ஜம்முவிலும் இளைஞர்களுக்கு வசதிகள் கிடைக்க வேண்டும்.

காஷ்மீரில் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை ஐனாக்ஸாகிய நாங்கள் துவக்கியுள்ளோம். புதிய ஒலியமைப்புடன் கூடிய 3 மல்டிபிளக்ஸ் வளாகங்களை வெள்ளித்திரையுடன் அமைத்துள்ளோம். சாய்வு இருக்கைகள், சாதராண இருக்கைகளையும் இங்கு கிடைக்கும்.

520 இருக்கைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், குழந்தைகளை ஈர்க்கும்படியான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பாகவும் இது உதவும்.

Tags :
|
|