Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு

லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு

By: Nagaraj Fri, 18 Aug 2023 6:35:47 PM

லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு

லண்டன்: இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக புகழ்பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிமு 15 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 19 ஆம் நூற்றாண்டு வரை பழங்கால நகைகள், வைரங்கள் மற்றும் கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இங்கு அவ்வப்போது கண்காட்சிகள் நடைபெறுவதால் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

museum,england,theft,objects,precious,england,items,museum,theft,valuable ,அருங்காட்சியகம், இங்கிலாந்து, திருட்டு, பொருட்கள், விலைமதிப்பு

இந்தநிலையில் தற்போது அருங்காட்சியகத்தில் நடத்திய ஆய்வின்போது சில விலைமதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ஆனால் சமீப காலமாக அங்கு கண்காட்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கண்காட்சியின்போது இவை திருடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்து அருங்காட்சியகத்தின் தலைவர் ஜார்ஜ் உத்தரவிட்டார். மேலும் திருடப்பட்ட பொருட்களை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

Tags :
|
|
|
|
|