Advertisement

தேனி அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா.. உஷார் மக்களே..

By: Monisha Thu, 07 July 2022 8:23:59 PM

தேனி அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா.. உஷார் மக்களே..

தமிழ்நாடு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு அதிகம் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பள்ளிகளில் சுகாதார துறையினர் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுத்து வருகின்றனர்.

corona,school,students,careful ,கொரோனா , தேனி,தடுப்பூசி, பரிசோதனை,

அதில் ஆண்டிபட்டி நகரில், கடைவீதி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் காய்ச்சல் மற்றும் சளியால் அவதியடைந்து வந்ததாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து சுகாதார துறையினர் அந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் முதற்கட்டமாக 78 குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவு இன்று காலை வெளியானதில், 12 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் பள்ளிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags :
|
|