கோவையில் தற்போது 3 விதமான காய்ச்சல் பரவல்
By: vaithegi Wed, 29 Nov 2023 10:13:09 AM
கோவை : கோவை மாவட்டத்தில் தற்போது மூன்று விதமான காய்ச்சல் பரவி கொண்டு வருகிறது. இதை தடுக்க நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. கோவையில் வடகிழக்கு பருவமழைகள் ப்ளூ வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த மாதத்தில் கோவை மாவட்டம் முழுவதும் 10 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. கோவை மருத்துவமனையில் கடந்த நவம்பர் 1 முதல் நேற்று முன்தினம் வரை டெங்கு காய்ச்சலுக்கு 29 பேர் சிகிச்சை பெற்றனர். டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் வரை சிகிச்சை பெற்று வந்தனர் 60 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இதனை அடுத்து 9 பேர் டெங்குவுக்காகவும், 23 பேர் காய்ச்சலுக்காகவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு எச்சரிக்கைக்கு முன்னதாக 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.