Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியன் ரயில்வே துறையில் நாடு முழுவதும் 3.12 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன

இந்தியன் ரயில்வே துறையில் நாடு முழுவதும் 3.12 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன

By: vaithegi Tue, 06 June 2023 11:17:16 AM

இந்தியன் ரயில்வே துறையில் நாடு முழுவதும் 3.12 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன

இந்தியா: இந்தியன் ரயில்வே துறையில் சிக்னல், தொலைத்தொடர்பு துறை, எலக்ட்ரிக்கல், சிவில் இன்ஜினியரிங் துறை, மெக்கானிக்கல் துறை என்று மொத்தமாக 3.12 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியீடு ....

இந்தியன் ரயில்வே துறையில் நாடு முழுவதும் 3.12 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

vacancies,indian railway department ,காலிப்பணியிடங்கள் ,இந்தியன் ரயில்வே துறை


இதையடுத்து அதில், தற்போது சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவில் காலியாகவுள்ள 77,000 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் 14,815 காலி பணியிடங்களும், போக்குவரத்துத் துறையில் 62,264 காலியிடங்களும் பிரிந்துவுள்ளன.

மேலும், சிவில் இன்ஜினியரிங் துறையில் 87,654 பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 64,346 காலியிடங்களும், எலக்ட்ரிக்கல் துறையில் 38,096 காலியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியன் ரயில்வே துறையில் அதிகளவிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் திறமையான வேலையாட்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags :