Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sun, 26 Mar 2023 1:01:35 PM

தமிழகத்தில் இன்று சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல கீழடுக்கு மாற்றம் காரணமாக பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து தற்போது அந்த கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு திசை காற்றுகள் சந்திப்பதால் தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

rain,cyclone ,மழை ,சூறாவளி

இதனை ஆடுது வளிமண்டலத்தில் பெரிய மாற்றமில்லாததால் எதிர்வரும் 3 நாட்களானான 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை துவங்கி விட்டது.

இறுதியாக சென்னையில், ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் எனவும், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|