Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Sun, 24 July 2022 9:36:35 PM

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் வட தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும். இதையடுத்து வருகிற ஜூலை 27ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தி.மலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சியில் ஜூலை 27ம் தேதி கனமழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

rainy,chennai,2 days ,மழை ,சென்னை, 2 நாட்கள்

கடந்த 24 மணி நேரத்தில் திருவாடானையில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, முதுகுளத்தூர், கள்ளிக்குடி, முத்துப்பேட்டையில் தலா 7 செ.மீ, திருமங்கலம், தலைஞாயிறில் தலா 6 செ.மீ, சோழவந்தான், சாத்தூர், மதுக்கூர், விருத்தாச்சலம், கோவிலங்குளம், திருத்துறைப்பூண்டி, மாமல்லபுரம், பட்டுக்கோட்டையூர் தலா 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|