Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் வருகிற 26ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 26ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 22 Nov 2022 1:55:18 PM

தமிழகத்தில் இன்று முதல்  வருகிற 26ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு மழை .... நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில்நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்றுகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வதுவிழந்து மந்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு அந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக,இன்று முதல் வருகிற 26ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain and weather centre ,மழை,வானிலை மையம்

இதனை தூது சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் ஒருசில பருதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பதிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :