Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளியுலகில் மாணவர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளது - பிரதமர் மோடி

வெளியுலகில் மாணவர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளது - பிரதமர் மோடி

By: Karunakaran Fri, 11 Sept 2020 4:34:19 PM

வெளியுலகில் மாணவர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளது - பிரதமர் மோடி

மத்திய கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி பற்றிய 2நாள் மாநாட்டை நடத்தியது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய மோடி, பெற்றோர்கள் பிள்ளைகளோடு உரையாடும் போது நீ என்ன கற்றாய் என்று கேட்பதில்லை. மாறாக எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாய் என்றுதான் கேட்கின்றனர். தேர்வுகளும், மதிப்பெண்களும்தான் ஒரு மாணவனுடைய அறிவை அளவீடு செய்வதற்கான அளவுகோலா? என்று கூறினார்.

வெளியுலகில் மாணவர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சுற்றுச்சூழல் பற்றிய அறிவு மாணவர்களுக்கு மிகவும் முக்கியம் என்று மோடி கூறினார்.

students,outside,prime minister modi,india ,மாணவர்கள், வெளியுலகம், பிரதமர் மோடி, இந்தியா

மரங்களை தெரிந்துகொள்ள நாங்கள் எடுத்த முயற்சி வெற்றிகரமாக இருந்ததாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், விவசாய நிலங்கள் என பல இடங்களில் மாணவர்களுக்கு அறிவை புகட்ட முடியும் என்றும் பிரதமர் மோடி மாநாட்டில் உரையாற்றினார்.

மேலும் அவர், மாணவர்களால் சக மாணவர்கள் பெயரை எவ்வளவு வேகமாக சொல்ல முடியும்? தலைவர்களின் படங்கள் பார்த்து மாணவர்கள் வேகமாக பெயரை சொல்லும் அளவிற்கு பழக்க வேண்டும். 4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்று கூறினார்.

Tags :