Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா நான்காம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்

இந்தியாவில் கொரோனா நான்காம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்

By: vaithegi Thu, 30 June 2022 4:39:06 PM

இந்தியாவில் கொரோனா நான்காம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்

இந்தியா: இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்று அலைகளின் தாக்கம் காரணமாக மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பலனாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. அதனால் பழைய நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா பரவல் மிக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இதையொட்டி, நேற்று முன்தினம் கொரோனாவால் 17,073 பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் பாதிப்பு குறைந்து 11,793 பேர் என பதிவானது. அதனை தொடர்ந்து இன்று 18,819 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

corona,vaccine ,கொரோனா,தடுப்பூசி

அதனால் மொத்த பாதிப்பு 4,34,52,164 பேராக பதிவாகி இருக்கிறது. மேலும் ஒரு நாளில் 39 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். அதனால் மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,25,116 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13,827 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். அதனால் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,28,22,493 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 1,04,555 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் நான்காம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

Tags :
|