Advertisement

வருகிற 8,9ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு

By: vaithegi Wed, 07 Dec 2022 6:49:51 PM

வருகிற 8,9ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு

சென்னை: டிச.8, 9 விடுமுறை? ... தமிழகத்தில் வடகிழக்கு பருமழை காரணமாக பல இடங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. இதையடுத்து கடந்த 5ம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அத்துடன் நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று மாலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இதனை அடுத்து இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக நாளை முதல் 10 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

vacation,school,college ,விடுமுறை , பள்ளி, கல்லூரி

மேலும் அத்துடன் அதீத கனமழை காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இந்த புயலால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு, வருகிற 8, 9ம் தேதி ஆகிய 2 நாட்கள் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|