Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு திசை காற்று ,வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு திசை காற்று ,வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Tue, 16 May 2023 09:33:59 AM

மேற்கு திசை காற்று ,வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் 100 மற்றும் 105 டிகிரி வரை அதிகமான வெயில் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் உயரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தமிழகத்தில் இன்று இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரும் என்றும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் அதாவது மே 16, 17 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

rain,westerly wind,convection ,மழை ,மேற்கு திசை காற்று ,வெப்பச்சலனம்

இதையடுத்து மழை ஆறுதலை கொடுத்தாலும் தமிழகம் புதுவையில் பல்வேறு இடங்களில் இயல்பான வெப்பநிலையில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமான வெப்பம் இருக்க கூடும் என அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருப்பதால் பொதுமக்களுக்கு அசவுரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச நிலை 40 முதல் 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துவுள்ளது

Tags :
|