Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்... கிறிஸ்மஸ் மரங்களுக்குதான்!!!

தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்... கிறிஸ்மஸ் மரங்களுக்குதான்!!!

By: Nagaraj Mon, 12 Dec 2022 11:44:21 AM

தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்... கிறிஸ்மஸ் மரங்களுக்குதான்!!!

கனடா: கனடாவில் கிறிஸ்மஸ் மரங்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் இந்த தட்டுப்பாடு நிலவுகிறது என்று தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக கிறிஸ்மஸ் மர செய்கைக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

சாதாரணமாக விற்பனை செய்யப்படக்கூடிய ஓர் மரமானது 8 முதல் 12 ஆண்டுகள் வரையில் வளர்க்கப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

price,rise,scarcity,underdevelopment,climate ,விலை, உயர்வு, தட்டுப்பாடு நிலை, வளர்ச்ச்சியடைவதில்லை, காலநிலை

காலநிலை மாற்றத்தினால் தற்பொழுது கிறிஸ்மஸ் மரங்களை செய்கை செய்வதில் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. சிறிய மரங்களை வளர்த்து எடுப்பதில் பல சவால்கள் காணப்படுவதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனப் பாதுகாப்பு விஞ்ஞான பிரிவின் பொறுப்பாளர் ரிச்சர்ட் ஹேம்லின் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு கோடை காலங்களிலும் கடுமையான வறட்சி மற்றும் அதீத வெப்பநிலை காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சிறிய கிறிஸ்மஸ் மரங்களை வளர்த்து எடுப்பதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் மர விதைகள் உரிய முறையில் வளர்ச்சியடைவதில்லை என தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் காலங்களில் கிறிஸ்மஸ் மரங்களின் விலைகள் உயர்வடையும் எனவும் தட்டுப்பாட்டு நிலை உருவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
|
|