Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு பரவும் அபாயம்

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு பரவும் அபாயம்

By: vaithegi Sat, 03 Sept 2022 4:24:29 PM

தமிழகத்தில்  தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு பரவும் அபாயம்

சென்னை: கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்புக்கு திரும்பி வரும் நிலையில் அடுத்த கட்ட தாக்குதலாக டெங்கு காய்ச்சல் மிக தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தால் மக்களுக்கு சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

அதை தொடர்ந்து தொடர் மழையால் ஏற்பட்டுள்ள கழிவுநீர் தேக்கத்தால் டெங்கு கொசுவால் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வழக்கமாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.

dengue,constant rain ,டெங்கு ,தொடர்ந்து மழை

தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும் சூழலில் தமிழகத்தில் கோவை, மதுரை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை அடுத்து இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அதன் படி டெங்கு பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள பகுதிகள் ‘ஹாட் ஸ்பாட்’ வார்டுகளாக பட்டியலிட்டு கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமித்து பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.


Tags :
|