Advertisement

சிலிண்டர் விலை மேலும் உயரும் அபாயம் இருப்பதாக தகவல்

By: vaithegi Sun, 28 May 2023 4:52:51 PM

சிலிண்டர் விலை மேலும் உயரும் அபாயம் இருப்பதாக தகவல்

சென்னை: ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சிலிண்டர் விலை குறித்து அறிவிப்பு வெளியாவது போன்று மே மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து வணிக சிலிண்டருக்கான விலை அதிக அளவில் அதிகரித்துள்ள நிலையில், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.

இதனால் ஹோட்டல் போன்ற வணிக தளங்களில் கள்ள சந்தையின் மூலம் வீட்டு சிலிண்டர்களை பெற்று அதனை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

cylinder price,market ,சிலிண்டர் விலை ,சந்தை

மேலும்,தற்போது வீட்டு சிலிண்டர் விலை, 1,118.50 ரூபாயாகவும்; வணிக சிலிண்டர் விலை 2,023 ரூபாயாகவும் உள்ளதால் இதன் மூலம் ரூ.1,000 க்கும் அதிகமாக லாபம் கிடைக்கிறது.

இது போன்ற செயல்களால் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்படலாம். இதனைத்தொடர்ந்து வீட்டு சிலிண்டர்களின் விலையும் அதிகம் உயரும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :