Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரசை சீன ஆய்வுக்கூடம் உருவாக்கிய ஆதாரம் உள்ளது - சீன பெண் விஞ்ஞானி

கொரோனா வைரசை சீன ஆய்வுக்கூடம் உருவாக்கிய ஆதாரம் உள்ளது - சீன பெண் விஞ்ஞானி

By: Karunakaran Mon, 14 Sept 2020 4:10:44 PM

கொரோனா வைரசை சீன ஆய்வுக்கூடம் உருவாக்கிய ஆதாரம் உள்ளது - சீன பெண் விஞ்ஞானி

கொரோனா வைரசை சீனாதான் தனது ஆய்வுக்கூடத்தில் உருவாக்கியது என பலர் கூறி வருகின்றனர். அமெரிக்கா அதிபர் டிரம்பும் ஆரம்பத்திலிருந்தே இந்த கருத்தை கூறி வருகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டை சீனா இதை மறுத்தது. உலகில் முதன் முதலாக சீனாவில் உள்ள வுகான் என்ற இடத்தில் இறைச்சி மற்றும் கடல் உணவு பொருட்கள் மார்க்கெட்டில் தான் கொரோனா வைரஸ் பரவியது.

வவ்வால் அல்லது எறும்பு தின்னி ஆகியவற்றின் மூலம் இது பரவி இருக்கலாம் என பலர் கூறுகின்றனர். இந்நிலையில், லீ மெங் யான் என்ற சீன பெண் விஞ்ஞானி ஒருவர், சீன ஆய்வுக்கூடத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது. அதற்கான ஆதாரம் தன்னிடத்தில் இருக்கிறது என்று கூறி உள்ளார். இவர் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் பொது சுகாதார கல்வி மையத்தில் விஞ்ஞானியாக இருந்து வந்தார்.

evidence,corona virus,chinese laboratory,chinese female scientist

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அவர் திடீரென சீனாவில் இருந்து வெளியேறி அமெரிக்கா சென்று விட்டார். தற்போது ரகசிய இடத்தில் வசித்து வரும் அவர் பேட்டி அளிக்கையில், தற்போது ரகசிய இடத்தில் வசித்து வரும் அவர், சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது பற்றிய முதல் தகவல்களை எங்களுக்கு வந்தன. அப்போது மக்களுக்கு அதுபற்றி சரியாக தெரிய வில்லை. எனவே, நான் விசாரணை மேற்கொண்டேன். அப்போது இந்த வைரஸ் வுகானில் உள்ள ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்பது எனக்கு தெரிய வந்தது என்று கூறினார்.

மேலும் அவர், இந்த ஆய்வுக்கூடத்தின் அருகே தான் இறைச்சி மார்க்கெட் உள்ளது. ஆய்வுக் கூடத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைத்து விட்டு மார்க்கெட்டில் இருந்து வைரஸ் வெளியேறியதாக தகவலை பரப்பினார்கள். ஆனால், ஆய்வுக்கூடத்தில் உருவாக்கியது என்பதற்கான ஆதாரம் எனக்கு கிடைத்தது. அதை நான் என் வசம் வைத்துள்ளேன். இதனால் எனக்கு பிரச்சினை ஏற்படலாம். எனவே, நான் என்னை பாதுகாத்துக்கொள்ள அமெரிக்கா வந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :