Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பண்டிகையை ஒட்டி போர் நிறுத்தம் இல்லை... ரஷ்யா திட்டவட்டம்

பண்டிகையை ஒட்டி போர் நிறுத்தம் இல்லை... ரஷ்யா திட்டவட்டம்

By: Nagaraj Sat, 17 Dec 2022 11:11:10 AM

பண்டிகையை ஒட்டி போர் நிறுத்தம் இல்லை... ரஷ்யா திட்டவட்டம்

ரஷ்யா: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, ஐரோப்பாவில் மிகப்பெரிய போராக, ரஷ்யா – உக்ரைன் போர் பார்க்கப்படுகிறது.

russia,president,ceasefire,christmas,ukraine,no ,ரஷ்யா, ஜனாதிபதி, போர்நிறுத்தம், கிறிஸ்துமஸ், உக்ரைன், இல்லை

போர் தொடங்கி 10 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக, கிறிஸ்துமஸிற்குள் ரஷ்யா படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கான எந்த திட்டமும் இதுவரை இல்லை என, ரஷ்ய ஜனாதிபதி அலுவலக செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

Tags :
|