Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட சான்ஸே இல்லை; எடப்பாடி திட்டவட்டம்

ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட சான்ஸே இல்லை; எடப்பாடி திட்டவட்டம்

By: Nagaraj Thu, 06 Oct 2022 9:43:24 PM

ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட சான்ஸே இல்லை; எடப்பாடி திட்டவட்டம்

சென்னை: அதற்கு வாய்ப்பே இல்லை... இல்லை.... ஓ.பி.எஸ்சுடன் இணைந்து செயல்பட 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என அதிமுக தற்காலிக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் எடப்பாடி நகராட்சி 12 வது வார்டு உறுப்பினர் ரவி தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுகவிற்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு கட்சியில் 100 சதவீதம் இடமில்லை அதிமுகவை முடக்க வேண்டும் என நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் திமுகவின் மூத்த அமைச்சர் பொதுகூட்டத்தில் அவதூறாக பேசுவது வருத்தத்திற்குரியது.

schemes,aiadmk,ops.,dmk government is freezing ,திட்டங்கள், அதிமுக, ஓபிஎஸ்., திமுக அரசு, முடக்கி வருகிறது

பல திமுக அமைச்சர்கள் மக்களை அவதூறாக பேசுவது கண்டிக்கத்தக்கது நிர்வாக திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டு உள்ளார். பருவ மழையினால் சென்னை மாநகரம் மிகவும் பாதிக்கப்படும். குடி மராமத்து திட்ட பணிக்காக திமுக அரசு எந்த ஒரு நிதியையும் ஒதுக்கவில்லை. நீர் பற்றாக்குறையான தமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்காமல் சேமிப்பது நமது கடமை.

அரசியல் பார்க்காமல் மக்கள் நலனுக்காக குடிமராமத்து திட்ட பணியை தொடர வேண்டும் மக்கள் நலனுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை, திமுக அரசு தற்போது முடக்கி வருகிறது இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.

Tags :
|
|