Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; முன்னாள் முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்

எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; முன்னாள் முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்

By: Nagaraj Tue, 04 Apr 2023 11:07:43 PM

எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; முன்னாள் முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்

ராமநகர்: முன்னாள் முதல்வர் தகவல்... ஹாசன் தொகுதியில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி ராமநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:- ஹாசன் தொகுதி சீட்டு குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சுமூகமாக முடிவு எடுக்கப்படும்.

தேவகவுடா டெல்லி சென்றார். அவர் பெங்களூரு திரும்பிய பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். பவானி ரேவண்ணாவுக்கு கட்சியில் சீட்டு கிடைக்காவிட்டால் சுயேட்சையாக போட்டியிடுவார் என்ற தகவல் குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். இந்த ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

change,hasan,kumaraswamy,position,volume , குமாரசாமி, தொகுதி, நிலைப்பாடு, மாற்றம், ஹாசன்

எங்கள் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த 2வது பட்டியலில் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள். 3வது வேட்பாளர் பட்டியல் அடுத்த 4-5 நாட்களில் வெளியிடப்படும்.

எனது சன்னபட்டணா தொகுதியில் பணத்தை எடுத்து வந்து செலவு செய்ய தயாராகி வருகிறார்கள். இவர்கள் கொரோனா நெருக்கடி காலத்தில் எங்கே இருந்தனர்?. இவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவார்கள்.

எனக்கு இன்னும் ஒரு ஆண்டு ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால், தொகுதியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு இருப்பேன். ஆனால் இந்த நபர்கள் தான் என்னை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கீழே இறக்கினர். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags :
|
|