Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை, திட்டமிட்டபடி திறக்கப்படும் .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை, திட்டமிட்டபடி திறக்கப்படும் .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

By: vaithegi Wed, 24 May 2023 09:38:08 AM

பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை, திட்டமிட்டபடி திறக்கப்படும்  .. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

சென்னை: பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் எந்த வித மாற்றமும் இல்லை, திட்டமிட்டபடி 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு வருகிற ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவிப்பு .... தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

விடுமுறை முடிந்து இன்னும் 1 வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முன்னதாக அறிவிக்கப்பட்ட படி, 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு வருகிற ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு வருகிற ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

minister of school education,schools , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ,பள்ளிகள்

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் மீண்டும் கேட்கப்பட்டபோது, அதற்கு விளக்கமளித்த அமைச்சர் , பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் எவ்வித மாற்றமும் இல்லை; திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். மேலும் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதலமைச்சர் அறிவிப்பார் எனவும் அவர் கூறினார்.

Tags :