Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக அதிமுக கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை .. அண்ணாமலை பேட்டி

பாஜக அதிமுக கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை .. அண்ணாமலை பேட்டி

By: vaithegi Fri, 24 Mar 2023 10:07:42 AM

பாஜக அதிமுக கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை .. அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை திரும்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதனையடுத்து அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் எந்த விதக் குழப்பமும் இல்லை. அமித்ஷாவுடனான எனது சந்திப்பு வழக்கமானதே.

annamalai,bjp,admk ,அண்ணாமலை ,பாஜக ,அதிமுக

இதையடுத்து தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். மக்களின் செல்வாக்கை பெற்று, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பாஜக வளர வேண்டும் என்பதே நோக்கம்.

மேலும் பாஜகவுக்கும், எனக்கும் தனிப்பட்ட கட்சி, தலைவர்கள் மீது மோதல் இல்லை. கட்சியை வலுப்படுத்த நினைக்கும் போது ஒரு சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம் தான். கட்சிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஆனாலும் பாஜக வேகமாக வளர வேண்டும் என நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|