Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாதுகாப்பு அளிப்பதில் எந்த குளறுபடியும் இல்லை... போலீசார் விளக்கம்

பாதுகாப்பு அளிப்பதில் எந்த குளறுபடியும் இல்லை... போலீசார் விளக்கம்

By: Nagaraj Sat, 28 Jan 2023 10:52:44 PM

பாதுகாப்பு அளிப்பதில் எந்த குளறுபடியும் இல்லை... போலீசார் விளக்கம்

காஷ்மீர்: ராகுலின் பாரத் ஜடோ யாத்திரைக்கு பாதுகாப்பு அளிப்பதில் எந்த குளறுபடியும் இல்லை என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி எம்.பி. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் முயற்சியாக ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ளது.

இந்த நிலையில் ஜம்முவிலிருந்து காஷ்மீருக்குள் நுழைந்த யாத்திரைக் குழுவினர், நேற்று காலை பனிஹல் ரயில்நிலையத்திலிருந்து யாத்திரையை தொடங்கி ஒரு கி.மீ. தொலைவு சென்றதும் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி யாத்திரையை நிறுத்திவிட்டனர்.

security,arrangement,police,expansion,banihalil. will begin ,பாதுகாப்பு, ஏற்பாடு, போலீசார், விரிவு, பனிஹலில். தொடங்கும்

இந்நிலையில் ராகுலின் பாரத் ஜடோ யாத்திரைக்கு பாதுகாப்பு அளிப்பதில் எந்த குளறுபடியும் இல்லை என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒரு கி.மீ. தொலைவு சென்றபின் யாத்திரையை நிறுத்துவது குறித்து தங்களுக்கு தகவல் ஏதும் இல்லை என்று போலீஸார் கூறினர்.

யாத்திரைக்கு ஏற்பாடு செய்தவர்கள் குறிப்பிட்ட நபர்களும், பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் மட்டுமே யாத்திரையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பில் குளறுபடி ஏதும் இல்லை. அவருக்கும் யாத்திரையில் செல்பவர்களுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

பனிஹலில் யாத்திரை தொடங்கும் இடத்தில் திடீரென பலரும் கூடினர். இதுபற்றி எங்களுக்கு முறையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும், நாங்கள் விரிவான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Tags :
|