Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு இனி தனிமைப்படுத்தல் கிடையாது

வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு இனி தனிமைப்படுத்தல் கிடையாது

By: Karunakaran Sat, 04 July 2020 12:05:00 PM

வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு இனி தனிமைப்படுத்தல் கிடையாது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்த நாடுகளில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளால் மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு 2 வார கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறை கடந்த மாதம் 8-ந்தேதி முதல் அமலில் இருந்து வந்தது.

uk,coronavirus,corona isolation,overseas ,இங்கிலாந்து, கொரோனா வைரஸ், கொரோனா தனிமை, வெளிநாடு

தற்போது இங்கிலாந்து நாட்டின் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷாப்ஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு 2 வார கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறைவரும் 10-ந் தேதி முதல்கிடையாது என அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவு முன்னணி சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2.85 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரமாகவும் உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் இந்த 50 நாடுகளின் பட்டியலில் அடங்கும். இன்று முதல் அங்குள்ள ஓட்டல்கள், உணவு விடுதிகள் தற்காலிகமாக திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|