Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூட்டணி தர்மம் என்ற நிர்பந்தம் இனி இல்லை... அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பெருமிதம்

கூட்டணி தர்மம் என்ற நிர்பந்தம் இனி இல்லை... அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பெருமிதம்

By: Nagaraj Mon, 02 Oct 2023 11:13:48 PM

கூட்டணி தர்மம் என்ற நிர்பந்தம் இனி இல்லை... அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பெருமிதம்

சென்னை: நிர்பந்தம் இனி இல்லை... கூட்டணி தர்மம் என்ற நிர்பந்தம் இனி அ.தி.மு.க.வுக்கு இல்லை. தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கூட்டணியிலிருந்து விலகி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் திருவாக்கவுண்டனூரில் கட்சியினரிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி விலகல் தொடர்பாக தாம் வாய் திறக்கவில்லை என்று கூறும் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

review,people,projects,salem,aiadmk,alliance,quit ,விமர்சனம், மக்கள், திட்டங்கள், சேலம், அதிமுக, கூட்டணி, விலகல்

உடன்பாடு இல்லாத விஷயங்களை கூட்டணி தர்மத்துக்காக நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இனி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சேலம் அஸ்தம்பட்டியில் பூத் கமிட்டி உறுப்பினர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களிடம் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் தி.மு.க.வினர் என்று விமர்சித்துள்ளார்.

Tags :
|
|
|
|