Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இலவச அரிசி திட்டம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை .. கூட்டுறவுத்துறை அமைச்சர்

தமிழகத்தில் இலவச அரிசி திட்டம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை .. கூட்டுறவுத்துறை அமைச்சர்

By: vaithegi Fri, 02 Sept 2022 5:11:07 PM

தமிழகத்தில் இலவச அரிசி திட்டம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை  ..  கூட்டுறவுத்துறை அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் மளிகை பொருட்களை பெற்று வருகின்றனர். கார்டு தொடர்பான விதிகள் மாற்றப்பட போதவதாகவும் அதனால் இனி தகுதி பெற்றவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநில மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

minister of cooperatives,free rice scheme ,கூட்டுறவுத்துறை அமைச்சர்,இலவச அரிசி திட்டம்

அதே போன்று தமிழகத்திலும் இலவச ரேஷன் அரிசி வழங்கப்படமாட்டாது என்று தகவல் வந்துள்ளது. இது குறித்து பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய அரசின் அறிவிப்பால் இலவச அரிசி திட்டம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை.

மேலும் கடத்தலின் போது பறிமுதல் செய்யப்படும் ரேஷன் அரிசியை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை பல எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து தற்போது நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Tags :